BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
மக்களவைத் தொகுதி மறுவரையறை - தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் என்ன மாற்றம் நிகழும்?
மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மறுவரையறை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து காணலாம்.
அவினாசி தொகுதி நிலவரம்: 'அதிமுக கோட்டையில்' போட்டியிடும் எல்.முருகன் - களம் எப்படி இருக்கிறது?
சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த அதிமுகவின் தனபாலை இரு முறை தேர்வு செய்த அவினாசி தொகுதியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவது இந்த தொகுதியை மீண்டும் கவனம் பெறவைத்துள்ளது.
'தேர்தல் பரிசுப்பொருள்' விநியோகத்தில் தகராறு - இளம் பெண் மரணம் தொடர்பாக 6 பேர் கைது
திருச்சி அருகே தேர்தல் பரிசுப்பொருள் விநியோகம் தொடர்பான தகராறில் இளம் பெண் மரணமடைந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் - மோதி பேசியது என்ன?
பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
காணொளி, காணொளி: ‘இது தமிழ்நாட்டுக்கு ஒரு கருப்பு நாள்’- கனிமொழி எம்.பி, கால அளவு 0,57
“இது தமிழ்நாட்டுக்கு ஒரு கருப்பு நாள். பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை, தொகுதி மறுவரையறை மசோதாவுடன் சேர்க்க வேண்டிய அவசியம் ஏன் என எங்களுக்கு தெரியவில்லை. மேலும், இந்த தொகுதி மறுவரையறை எப்படி செய்யப்படும் என்பதில் எந்த தெளிவும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
"புற்றுநோய்க்கு எதிராக உடலின் சக்தி": இம்யூனோதெரபி எப்படி உயிர்களை காப்பாற்றுகிறது?
நூற்றாண்டு கால வளர்ச்சிக்குப் பிறகு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி புற்றுநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை இன்றியே முற்றிலுமாக அகற்றும் 'இம்யூனோதெரபி' மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசிகள் மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
"அதிவேக ஸ்பின்னராக" மிரட்டும் க்ருனால் பாண்ட்யா - லக்னௌ அணி ஆர்சிபியிடம் ஆட்டத்தை இழந்தது எங்கே?
ஐ.பி.எல் 2026 தொடரில், லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான நேற்றைய (ஏப்ரல் 15) போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது எப்படி?
நேரலை, "தொகுதி மறுவரையறை" - முன்மொழியப்பட்ட மசோதா நகலை எரித்த ஸ்டாலின்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
காணொளி, காணொளி: திருவண்ணாமலை மக்கள் எதிர்பார்ப்பு என்ன? - உங்கள் குரல், கால அளவு 9,22
திருவண்ணாமலை மக்கள் எதிர்பார்ப்பு என்ன? - உங்கள் குரல்
கால்சட்டை முதல் கீரை வரை - பாரசீகத்திலிருந்து உலகம் முழுவதும் பரவிய 8 விஷயங்கள்
"மேற்கத்திய நாடுகளில் நம்மிடம் உள்ள பல கருத்துக்களுக்கு பாரசீக உலகமே காரணம்" என்று இரானில் படித்துப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜோஸ் குட்டிலாஸ் கூறுகிறார்.
டிசிஎஸ் ஊழியர்கள் மீது பாலியல் கொடுமை குற்றச்சாட்டு - ஒரு பெண் உட்பட 7 பேர் கைது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் எட்டு பெண்கள் மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தங்களது அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மிரட்டப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மற்றும் மன ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் அந்தப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்?
பாகிஸ்தானில் நடைபெற்ற இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடிவில்லாமல் போனதாகக் குறிப்பிடும் வான்ஸ், ஒப்பந்தம் ஏற்படாதது இரண்டு வாரகால போர்நிறுத்தத்தின் மீது என்ன தாக்கம் செலுத்தும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இரான் ஒரு ஏவுகணையை வைத்தே ஹோர்முஸ் வழி கப்பல் போக்குவரத்தை முடக்க முடியும் - எப்படி தெரியுமா?
இரான் அரசு கண்ணிவெடி ஆபத்து காரணமாக மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ள சூழலில், போர்நிறுத்தத்திற்குப் பின் ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து மிகக் குறைந்த அளவிலேயே தொடங்கியுள்ளது.
"குண்டு வீச்சால் தரை அதிர்ந்தது" - இரானிலிருந்து திரும்பிய தமிழக மீனவர்களின் அனுபவம் என்ன?
இந்திய தூதரகத்தின் மூலம் முதல் கட்டமாக இரானில் தவித்து வந்த 345 தமிழக மீனவர்களை மீட்டு சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்
இரான் போர் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அவற்றில், மூன்று முக்கிய தருணங்கள் தனித்து நிற்கின்றன. பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹொர்முஸ் நெருக்கடி அமையுமா?
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது.
குடகு: மலையேற்றத்தின் போது காணாமல் போன கேரள பெண் காட்டிற்குள் 4 நாள் உயிர் பிழைத்தது எப்படி?
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலையேற்றப் பாதையில் வழிதவறிய தொழில்நுட்ப வல்லுநர் சரண்யாவை, வனத்துறை அதிகாரிகள் நான்கு நாட்கள் கழித்து மீட்டுள்ளனர்.
நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி
நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பேசியபோது தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
விஜய் பரப்புரை மட்டும் அடுத்தடுத்து ரத்தாக என்ன காரணம்?
தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே பரப்புரை செய்துள்ள தவெக தலைவர் விஜய், 3 நாட்கள் தனது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.
பெண்கள், இளைஞர்களுக்கு குறி: தமிழக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எதை உணர்த்துகின்றன?
அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.
"சுனாமியை விட பெருஞ்சேதம்" - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
ஒரு காலத்தில் தனது பொருளாதார வளர்ச்சிக்காகவும், மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் உயர் மதிப்பீடுகளுக்காகவும் கொண்டாடப்பட்ட இந்த எழில்மிகு தெற்காசியத் தீவு, மீண்டும் ஒருமுறை மிக மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
லேசர் சிகிச்சை மூலம் கண்ணாடிக்கு 'குட்பை' சொல்ல நினைக்கிறீர்களா? 8 முக்கிய விஷயங்கள்
கடந்த சில ஆண்டுகளில் லேசிக் அறுவை சிகிச்சை மீதான மக்களின் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த கண் அறுவை சிகிச்சை உண்மையில் அனைவருக்கும் பாதுகாப்பான, பொருத்தமான தீர்வுதானா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குத் திரும்பியது: விண்கலம் 6 நிமிடம் தொடர்பை இழந்த போது என்ன நடந்தது?
மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். என்ன நடக்கிறது?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































