"ராஜகுருவுக்கு அரசு பதவியா" விஜயை விமர்சித்த பிரேமலதா

காணொளிக் குறிப்பு, "ராஜகுருவுக்கு அரசு பதவியா" விஜயை விமர்சித்த பிரேமலதா
"ராஜகுருவுக்கு அரசு பதவியா" விஜயை விமர்சித்த பிரேமலதா
பிரசுரிக்கப்பட்டது

தீர்மானத்தின் மீது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

அவர் தனது உரையில், " தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததாக கூறுவது மனவேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் நடக்காத விஷயம். அதனை நினைத்து நான் மனவேதனை அடைகிறேன்." என்றார். "முதல்வரைச் சந்திக்க யார் முகமூடி அணிந்து வந்தார் எனத் தெரிவிக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதைவிட தலைகுனிவு இருக்க முடியாது. " எனவும் கூறினார்.

"அதே போல அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என முதல்வர் தெரிவித்தார். ஆனால் இன்று அவரின் ராஜ குருவாக இருக்கும் ரத்தன் பண்டிட்டை அரசின் உயர் பொறுப்பில் நியமித்ததை ஒட்டுமொத்த தமிழக அரசின் சார்பாக தேமுதிக கண்டிக்கிறது." எனத் தெரிவித்தார்.

திமுக உறுப்பினர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் வெளிநடப்பு செய்தார்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு