You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈடாக அமெரிக்கா இரானுக்கு 300 பில்லியன் டாலரை வழங்குமா?
புதன்கிழமை அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் குறிக்கிறது. அதேவேளையில், மற்ற அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தொடரும்.
மாநில அரசு கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனால் என்னவாகும்? 5 கேள்வி-பதில்கள்
சமீபத்திய நிகழ்வுகள் மாநில அரசு கடன் பெறுவது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளன, மாநில அரசு எங்கெல்லாம் கடன் பெற முடியும், அதனை எவ்வாறு திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
காணாமல் போன 2 வயது சிறுமி; '10 நாட்களுக்கு மேலாகியும் ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை' - என்ன நடந்தது?
காக்கிநாடா மாவட்டம், தொண்டவாகா பஞ்சாயத்து சி.எச். அக்ரஹாரத்தில் உள்ள ஒரு பாமாயில் தோட்டத்தில் தனது தந்தையைத் தேடிச் சென்றபோது காணாமல் போன இரண்டு வயது சிறுமி ஞானேஸ்வரியைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அமெரிக்கா - இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பாதிக்கக்கூடிய 3 காரணிகள்
போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்படவில்லை, ஆனால் லெபனானில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கை, இரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை போன்ற முக்கிய சவால்களை நோக்கிக் கவனம் நகரத் தொடங்கியுள்ளது.
எந்தெந்த விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது? மதுரை உயர்நீதிமன்றம் கூறியது என்ன?
மனநலம் சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் திருமண மற்றும் விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட அடையாள விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
'பணியாளர்கள் பற்றாக்குறை, சோர்வில் விமானிகள்' - இந்தியாவில் விமான பயணம் பாதுகாப்பானதா? - பிபிசி புலனாய்வு
விமான விபத்துகள் மற்றும் அவற்றை கையாள்வதற்கான இந்தியாவின் திட்டங்களுக்கு இடையேயான இடைவெளியைப் புரிந்துகொள்ள விமானிகள், விமானப் பணியாளர்கள், அதிகாரிகள், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பிபிசி பேசியது.
"இரு மொழிக்கொள்கை, தேர்தல் வாக்குறுதி" - இவை பற்றி ஆளுநர் உரையில் கூறப்பட்டது என்ன?
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது .
'கோஸ்ட் சிம்': உங்கள் பெயரில் மோசடி சிம் உருவாக்க முடியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
தங்கள் பெயரில் எத்தனை சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய, சஞ்சார் சாத்தி இணையதளத்தைச் சரிபார்க்குமாறும்; தங்கள் அனுமதியின்றித் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத சிம் அட்டைகளை உடனடியாகத் துண்டிக்குமாறும் இணையக் குற்றப்பிரிவு துணை ஆணையர் அரவிந்த் அறிவுறுத்துகிறார்
அமலுக்கு வந்துள்ள அமெரிக்கா, இரான் ஒப்பந்தத்தின் 14 அம்சங்கள் என்ன?
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அமெரிக்க-இரான் ஒப்பந்தம் கையெழுத்தாகி, இப்போது அமலுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். ஒப்பந்தத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவை.
பளு தூக்கினால் வயதானாலும் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?
அனைத்து உடற்பயிற்சிகளும் நீங்கள் நீண்ட காலம் வாழ உதவுகின்றன, ஆனால் தசை வலிமைக்கான பயிற்சிகள் மேலும் சிறந்த வாழ்க்கையை வாழ உதவுகின்றன. எவ்வாறு வலிமை பெறலாம்?
இந்தியா கால்பந்து உலகக் கோப்பையில் இதுவரை விளையாட முடியாமல் இருப்பது ஏன்?
ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவது இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே நீடிப்பது ஏன்? ஒரு நாள் கால்பந்தின் மிகப்பெரிய மேடைக்கு இந்தியாவால் செல்ல முடியுமா?
தவெக அரசின் முதல் பட்ஜெட்: விஜய் அரசுக்கு இருக்கும் 3 சவால்கள் என்ன?
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து, தாக்கல் செய்யப்போகும் அதன் முதல் பட்ஜெட்டில் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் சூப்பர்ஃபுட்: 'மத்தி மீனில்' உள்ள 3 முக்கிய சத்துகள்
மத்தி மீன்களைத் தொடர்ந்து உண்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் மற்றும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதல்வர் விஜய் சென்ற தேவாலயத்திற்கு இந்திய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தான், சீன நாணய மதிப்பு உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - என்ன காரணம்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
வெள்ளைப் புலி என்பது தனி ஒரு புலி இனமா? நீலகிரி மாவட்டத்தில் தென்பட்ட புலி பற்றி ஆய்வாளர்கள் விளக்கம்
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?
'நான் கண்ணீர் விட்டு அழுதேன்': மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் கூறியது என்ன?
பிரிட்டனில் தற்போது உறுப்புப் பெரிதாக்கும் சிகிச்சைகளைவிட மார்பகங்களை சுருக்கும் சிகிச்சைகளையே அதிகமானோர் தேர்ந்தெடுக்கின்றனர்
இலங்கையில் சீன திட்டங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டையா? சீன தூதரின் பேச்சால் எழும் விவாதம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 'தேவையற்ற வெளி அழுத்தங்கள்' முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த 'முட்டுக்கட்டைகள்' மற்றும் 'முதலீட்டு முயற்சிகள்' எத்தகையவை?
வெயில் 40 டிகிரி தாண்டினால் உடலில் என்ன நடக்கும்? உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய வழிகள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்