காணொளி: மும்பையை ஒரு காலத்தில் கலக்கிய டப்பாவாலாவின் இன்றைய நிலை

காணொளிக் குறிப்பு,
காணொளி: மும்பையை ஒரு காலத்தில் கலக்கிய டப்பாவாலாவின் இன்றைய நிலை

கோவிட் பேரிடரின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, அதைத் தொடர்ந்து மும்பையிலுள்ள நிறுவனங்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறைக்கு மாறியது ஆகிய காரணிகள், ‘டப்பாவாலா’ அமைப்பின் அடித்தளத்திற்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதை எதிர்கொண்டவர்களில் பாலு பாகு ஷிண்டேவும் ஒருவர். மும்பையில் 20 ஆண்டுகளாக டப்பாவாலா விநியோகஸ்தராக பணியாற்றினார். ஆனால் தற்போது, தனது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக, இவர் கட்டாயத்தின் பேரில் ஆட்டோ ஒட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளில், பாலு மட்டுமின்றி, ஆயிரக்கணக்கானவர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருந்த டப்பாவாலா தொழிலைக் கைவிட்டுள்ளனர்.

மும்பையின் டப்பாவாலாக்கள் தங்கள் சேவைக்காக, ஒரு டிஃபனுக்கு மாதம் சுமார் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்கள் ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை, தங்கள் கட்டணத்தை வெறும் 100 ரூபாய் மட்டுமே உயர்த்துகின்றனர். இப்படி இருந்தபோதிலும், அவர்களுக்குக் கிடைத்து வந்த ஆர்டர்கள் குறைந்துள்ளன.

இதில் இளம் தலைமுறையினருக்குப் போதிய ஆர்வம் இல்லாததே, அவர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய சவாலாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு